14 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்தவர் 48 மணி நேரத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

14 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்தவர் 48 மணி நேரத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு ஆண்டிகுவா நாட்டிற்கு தப்பி ஓடிய வியாபாரி மெகுல் சோக்சி 48 மணி நேரத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் வைர வியாபாரிகள் மெகுல் சோக்ஸி கடந்த 2018ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார். அவர் ஆண்டிகுவா என்ற நாட்டில் குடும்பத்துடன் தங்கி இருப்பதாகவும் அந்நாட்டில் அவர் குடியுரிமையும் பெற்று விட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் ஆண்டிகுவாவில் இருந்து படகு மூலம் அவர் அருகில் உள்ள நாடான டொமினிக் நாட்டிற்கு சமீபத்தில் சென்ற போது அந்நாட்டு காவல் துறையினர்களால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை ஆண்டி குழுவுக்கு அனுப்ப டொமினிக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் சோக்சி ஆண்டிகுவாவுக்கு சென்று விட்டால் அவருக்கு நாட்டின் குடியுரிமை இருப்பதால் அந்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அவரை எளிதில் கொண்டுவர முடியாது என்பதால் டொமினிக்கா நாட்டில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு ஆண்டிகுவா பிரதமர் ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் 48 மணி நேரத்தில் இந்திய வங்கியில் 14,000 கோடி மோசடி செய்த சோக்ஸி இந்தியாவுக்கு நாடு கடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com