கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுத்தது அமெரிக்கா!

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுத்தது அமெரிக்கா!

இந்தியாவில் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இந்த தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நிராகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான ஒகுஜன் என்ற நிறுவனம் அமெரிக்காவில் கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூடுதல் பரிசோதனைகளை நடத்தி அதன் முடிவுகளை தந்தால் மட்டுமே கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே கூடுதல் பரிசோதனை செய்து பயோடெக் நிறுவனம் டேட்டாவை தர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏற்கனவே எதிர்க்கட்சியினர் கோவாக்சின் தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பியபோது அதுகுறித்து பாஜகவினர் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டினார்கள். இந்த நிலையில் தற்போது அமெரிக்க அரசு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி தராமல் நிராகரிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com