ஹாலிவுட்டின் 'MGM Studio' நிறுவனத்தை வாங்கியது அமேசான்!- வைரல் கலாய் மீம்ஸ்

எம்.ஜி.எம் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களை அமேசான் பிரைம் விஞ்சும் என்று தெரிகிறது.
ஹாலிவுட்டின் 'MGM Studio' நிறுவனத்தை வாங்கியது அமேசான்!- வைரல் கலாய் மீம்ஸ்

அமேசான் நிறுவனம், ஹாலிவுட்டின் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான 'எம்.ஜி.எம் ஸ்டூடியோஸ்' நிறுவனத்தை சுமார் 8.45 பில்லியன் டாலருக்கு வாங்கி உள்ளது. பல்வேறு துறைகளில் கால் வைத்து, தடம் பதித்துள்ள அமேசான் நிறுவனத்துக்கு இது மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் தற்போது உலக அளவில் அசுர வளர்ச்சிப் பெற்று வருகிறது.

எம்.ஜி.எம் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களை அமேசான் பிரைம் விஞ்சும் என்று தெரிகிறது. எம்.ஜி.எம் நிறுவனத்தை வாங்கியது குறித்து அமேசான் நிறுவனத்தில் நிறுவனர், ஜெஃப் பெசோஸ், 'எம்.ஜி.எம் நிறுவனத்திடம் பல்வேறு சினிமாக்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களும் அமேசான் பிரைம் நிறுவனமும் சேரும் பட்சத்தில் ஏற்படப் போகும் வாய்ப்புகள் ஊக்கம் அளிக்கின்றன' என்று உற்சாகம் ததும்ப கூறியுள்ளார்.

அமேசான் நிறுவனம், எம்.ஜி.எம் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக வாங்கியதைத் தொடர்ந்து பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகின்றன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com