பிரான்ஸ் அதிபருக்கு அறைவிட்ட நபர் கைது; என்ன தண்டனை தெரியுமா?

பிரான்ஸ் அதிபருக்கு அறைவிட்ட நபர் கைது; என்ன தண்டனை தெரியுமா?

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரோனை கன்னத்தில் அறைந்த நபருக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்குப் பகுதிக்கு அரசு ரீதியான பயணத்தை மேற்கொண்டுள்ளார் அதிபர் இமானுவேல். அப்போது அவர் அங்கு கூடியிருந்த மக்களிடம் கை குலுக்கி மகிழ்ந்தார். அப்போது திடீரென ஒருவர் அதிபர் இமானுவேலை கன்னத்தில் அறைந்துவிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபரின் பெயர் டேமியன் டரேல் என்றும், 28 வயதாகும் அந்த நபர் வலதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் அதிபர் இமானுவேலை கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்தான காணொலிக் காட்சிகள் உலக வைரலாகி உள்ளன. இதை அடுத்து வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், டேமியனுக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனையும், அரசு பணிகள் செய்ய தடையும் விதித்து உத்தரவிட்டு உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com