உலக நாடுகள் 10 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வெண்டும்: உலக சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசி போடுவதில் உலக நாடுகளிடையில் பெரும் சமத்துவமின்மை நிலவி வருகிறது.
உலக நாடுகள் 10 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வெண்டும்: உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகள் தங்களது மக்களுக்கு எவ்வளவு தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

2021 செப்டம்பர் மாதம் முடிவில் 10 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

அடுத்த 3 மாதத்தில், அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் 30 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடுவதில் உலக நாடுகளிடையில் சமத்துவமின்மை நிலவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவிஷில்ட், கோவாக்சின் என இரண்டு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

ஜான்சன் & ஜான்சன் ஹைதராபாத்தில் தங்களது கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான பணியில் உள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிக்கு சர்வதேச ஒப்பந்தத்தை கூறியுள்ளன.

அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனம், இந்திய மாநில அரசுகளுக்கு நேரடியாக கொரோனா தடுப்பூசி அளிக்க முடியாது என்று கூறியுள்ளது. மத்திய அரசை பேசுமாறு கூறியது.

தொடர்ந்து மத்திய அரசு இன்று மாடர்னா நிறுவனத்திடம் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை நேரடியாக இந்திய மாநில அரசுகளுக்கு வழங்க ரஷ்யா மும்வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை செய்ய பார்மா நிறுவங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com