Connect with us

கிரிக்கெட்

நேற்றைய போட்டியில் நடராஜன் களமிறக்கப்படாதது ஏன்? விவிஎஸ் லட்சுமண் விளக்கம்!

Published

on

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 151 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய அந்த ஹைதராபாத் அணி முதல் 10 ஓவர்கள் வரை ஆட்டத்தை தனது பக்கமே வைத்திருந்தது. ஆனால் அதன் பின் திடீரென ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன் களமிறக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து ஐதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:

நேற்றைய ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் களமிறங்கவில்லை. அவரின் இடதுகாலில் லேசான வீக்கம் இருந்ததால் தொடர்ந்து அவர் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கலீல் அகமது களமிறக்கப்பட்டார். நடராஜன் காலில் ஏற்பட்ட வீக்கம் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து வருகிறோம். சன்ரைசர்ஸ் மருத்துவ ஆலோசகர்கள் சரியான முடிவை எடுப்பார்கள். அது அவருக்கும், உரிமையாளருக்கும் பயனளிக்கும்” என்று விவிஎஸ் லட்சுமண் கூறினார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?