மரக்காணம் கலவர வழக்கு: அன்புமணி உள்பட 6 பேருக்கு பிடிவாரண்ட்!

மரக்காணம் கலவர வழக்கு: அன்புமணி உள்பட 6 பேருக்கு பிடிவாரண்ட்!

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மரக்காணம் கலவர வழக்கில் ஆஜராகாத அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 பேருக்கு செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்த போது பாமகவினர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் மோதல் வெடித்தது. இந்த மோதல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அன்புமணி உள்பட பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி, ஏகே மூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆறு பேரும் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக வில்லை. இதனை அடுத்து ஆறு பேரையும் மே 15ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு காவல்துறைக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com