அனில் கும்ப்ளே போல பவுலிங் செய்து பயிற்சியில் ஈடுபடும் பும்ரா #ViralVideo

அனில் கும்ப்ளே போல பவுலிங் செய்து பயிற்சியில் ஈடுபடும் பும்ரா #ViralVideo

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர், ஜஸ்ப்ரீத் பும்ராவின் திறன் பற்றி நாம் அறிந்ததே. யார்க்கர்கள் மூலம் பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளைத் தெறிக்கவிடும் பும்ரா, தன்னுடைய கன்சிஸ்டன்ஸி மூலம் டெஸ்ட் அரங்கிலும் கொடிகட்டி பறந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் 3 போட்டிகளில் விளையாடிய பும்ரா, தன் பவுலிங் மூலம் அணிக்கு வெற்றித் தேடித் தந்தார். 4வது போட்டியில் காயம் காரணமாக அவர் விலகினார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி, டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள பும்ரா, வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர், பயிற்சியின் போது அனில் கும்ப்ளே போல பந்து வீசியுள்ள வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கும்ப்ளே போல பும்ரா பந்து வீசும் வீடியோ:

இங்கிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. அதற்காக இரு நாட்டு வீரர்களும் தற்போது சென்னையில் தங்கி பயிற்சி எடுத்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com