கொரோனா பரவலால் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்: ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழப்பு!

கொரோனா பரவலால் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்: ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுவிட்டன. நவம்பர் மாதம் வரை இதே நிலை தான் இருந்தது என்பதை அடுத்து தற்போது தான் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் இருந்ததால் நடைபாதை வியாபாரிகள் உள்பட பலரும் மீண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை கட்டுப்பாடின்றி பரவி வருவதை அடுத்து சுற்றுலா மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் குமரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் இன்றி தற்போது சிக்கலில் உள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது சுத்தமாக இல்லை என்பதால் அனைத்து சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன என்பதும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் ஒரு சுற்றுலா பயணிகள் கூட இல்லை என்றும் அனைத்து விடுதிகளும் காலியாக இருக்கின்றன என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி கிடைப்பதால் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com