திருடி சென்ற தடுப்பூசி மருந்துகளை மன்னிப்பு கடித்ததோடு திருப்பி கொண்டு வந்து வைத்த திருடர்கள்!

திருடி சென்ற தடுப்பூசி மருந்துகளை மன்னிப்பு கடித்ததோடு திருப்பி கொண்டு வந்து வைத்த திருடர்கள்!

நேற்று ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 1710 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த தடுப்பூசி மருந்துகள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையில் புகார் அளித்தது.

கொரோனா தடுப்பூசி மருந்துகள் திருடு போனதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்குக்கூட கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருந்துகள் இல்லாத நிலை இருந்தது. இது குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது தவறை உணர்ந்த திருடர்கள் மீண்டும் திருடிய மருந்துகளை திரும்ப மருத்துவமனையிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அதுமட்டுமின்றி மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்துள்ளனர். பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி மருந்துகளை திருடியதற்காக வருந்துகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இருப்பினும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை திருடியவர்கள் யாரென்று தெரியாததால் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது தடுப்பூசி மருந்துகள் கிடைத்து விட்டதன் காரணமாக மீண்டும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்துகளை திருடிய திருடர்களை மீண்டும் கொண்டு வந்து வைத்துவிட்டு மன்னிப்புக் கடிதமும் வைத்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com