ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்: அதிரடி அறிவிப்பு

ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று தமிழக அரசு பல்வேறு அதிரடி கட்டுப்பாடு அறிவிப்புகளை வெளியிட்டது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள் மூடப்படும், இரவு நேரத்தில் வாகனங்கள் அனுமதி கிடையாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் கொரோனா வைரஸ் பரவாதா? என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி டாஸ்மாக் கடைகளும் நாளை மறுநாள் முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகளும் முழுமையாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளுக்கு கட்டப்பட்ட விதிக்கப்பட்ட கட்டுப்பாடு விதிக்கபடாமல் இருந்ததற்கு எழுந்த கண்டனங்களை அடுத்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com