கோவையிலும் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்: ஜீரோ வார்டும் நிரம்பியதால் பரபரப்பு!

கோவையிலும் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்: ஜீரோ வார்டும் நிரம்பியதால் பரபரப்பு!

தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை இருந்துவரும் நிலையில் தற்போது சென்னையை அடுத்து கோவையிலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ள மாவட்டமாக உள்ளது. கோவையில் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை முழுவதும் நிரம்பி விட்டது. படுக்கைகள் காலியாகும் வரை காத்திருக்கும் ஜீரோ வார்டு என கூறப்படும் வார்டுகளும் தற்போது நிரம்பிவிட்டது.

ஜீரோ வார்டில் காத்திருக்கும் நோயாளிகளுக்கே சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னர் தான் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை கிடைக்கும் நிலையில் தற்போது ஜீரோ வார்டும் நிரம்பி விட்டதால் அங்கு ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை தினமும் கொரோனாவால் பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கூட தற்போது ஆக்சிஜன் படுக்கை நிரம்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து ஆம்புலன்சில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com