சென்னை தனியார் பள்ளி விவகாரம்: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்!

சென்னை தனியார் பள்ளி விவகாரம்: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்!

சென்னையின் புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியர் மீது பாலியல் புகார் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பள்ளியின் கேகே நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் மீது தான் இந்த புகார் எழுப்பப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர் அமைப்பும் வலியுறுத்தி அழுத்தமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு. இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி அவர்களும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பள்ளி மேலாளர்கள் என நடிகர் ஒய்ஜி மகேந்திரன் மற்றும் அவரது மகள் மதுவந்தி எனக் கூறப்பட்ட நிலையில் இது குறித்து ஒய்ஜி மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அந்த பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை என்றும் நான் பள்ளியில் ஒரு டிரஸ்டி தான் என்றும் எனது தம்பி மனைவியும் தம்பியும் தான் வழி நடத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது விழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் பள்ளி டிரஸ்டி என்ற முறையில் ஒய்.ஜி மகேந்திரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com