சத்தமில்லாமல் கரையைக் கடந்த 'யாஸ்' புயல்: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கொட்டும் மழை!

சத்தமில்லாமல் கரையைக் கடந்த 'யாஸ்' புயல்: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கொட்டும் மழை!

யாஸ் புயல் இன்று மதியம் ஒடிசாவில் பெரிய சேதங்களை விளைவிக்காமல் கரையைக் கடந்துள்ளது என்று தகவல்கள் வந்துள்ளன.

யாஸ் புயல் குறித்து, பிரபல வானிலை வல்லுநர், 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், 'யாஸ் புயல் தற்போது எந்த வித பரபரப்பும் இல்லாமல் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது. கிட்டத்தட்ட நிவர் புயலைப் போலவே யாஸ் புயலும் கரையைக் கடந்துள்ளது.

பாலசோர் மாவட்டத்தில் சுமார் 87 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது யாஸ். ஒடிசாவில் பலத்தக் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், அந்த அளவுக்கு காற்று வீசவில்லை. மாறாக, ஒடிசாவின் முன்னால் தற்போது இருக்கும் பிரச்சனை கனமழை தான்' என்றுள்ளார்.

இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com