வங்கக் கடலில் உருவாகும் 'யாஸ்' புயல்: தமிழகத்திற்கு எந்தளவு மழை பெய்யும்?

வங்கக் கடலில் உருவாகும் 'யாஸ்' புயல்: தமிழகத்திற்கு எந்தளவு மழை பெய்யும்?

வங்கக் கடலில் 'யாஸ்' புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், அதன் மூலம் தமிழகத்திற்கு மழை பெய்யுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பிரபல வானிலை வல்லுநரான 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளதாவது:-

யாஸ் புயல் மூலம் தமிழகத்தில் நேரடி பாதிப்பு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. கன்னியாகுமரியில் ஆங்காங்கே மழை பெய்யலாம். 25 ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் மழையை எதிர்பார்க்கலாம்.

அதேபோல தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யலாம். அதேபோல கேரளாவில் நாளை முதல் அடுத்த 5 அல்லது 6 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

யாஸ் புயல் மூலம் வட தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும். திருவள்ளூர் முதல் தஞ்சாவூர் வரை இதை எதிர்பார்க்கலாம். அதேபோல சென்னை, கடலூர், புதுச்சேரி போன்ற பகுதிகளில் வெப்பநிலையானது 39 முதல் 41 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com