கொரோனாவால் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் தமிழக அரசு நிதியுதவியா?

கொரோனாவால் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் தமிழக அரசு நிதியுதவியா?

கொரோனா நோய் தொற்றால் தமிழ்நாட்டில் மரணமடைந்த அனைவரது குடும்பங்களுக்கு நிதி உதவி கொடுக்கப்படும் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர், 'அதிமுகவைச் சேர்ந்த ஒரு அமைச்சர், நேற்று விபரம் தெரியாமல் ஒரு புரளியைக் கூறியுள்ளார். அதாவது கொரோனாவால் உயிரிழக்கும் அனைவரது குடும்பங்களுக்கும் அரசு நிதி உதவி செய்யும் என்பது போல அவர் கூறியுள்ளார். அதேபோல முன்னாள் முதல்வரும் இதையொட்டிய கருத்தைப் பொது வெளியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் நிதி உதவி செய்யப்படவில்லை. மாநில அரசுகளும் செய்யவில்லை, ஒன்றிய அரசும் செய்யவில்லை.

கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்குத் தான் நிதி உதவி செய்து தரப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத் தான் தவறுதலாக புரிந்து கொண்டு இப்படி புரளி பரப்பப்பட்டு வருகிறது' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com