முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கத்திற்கு இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கத்திற்கு இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நேற்று அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீர் 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள பிரகாசம் என்பவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபீல் தொழிலாளர் நலத்துறையிலும் வக்பு வாரியத்திலும் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 105 நபர்களிடம் 6 கோடிக்கு மேல் பணம் வசூல் செய்ததாகவும், ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பை காட்டி வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதன்பிறகு தேர்தல் முடிந்தவுடன் கண்டிப்பாக வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை. இதனையடுத்து பணம் கொடுத்து அனைவரும் அவரிடம் பணத்தை மீண்டும் கேட்டு நெருக்கடி தந்துள்ளனர்.

இந்த நிலையில் பணத்தை தராமல் இழுத்தடித்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் ரூபாய் 6 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதிமுக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைமையிலான அரசு இந்த மோசடி குற்றச்சாட்டு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தாங்கள் நம்புவதாக நிலோபர் கபீல் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த 105 பேர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com