பிளஸ் 2 தேர்வு எப்போது?- தமிழக அரசு முக்கிய தகவல்

பிளஸ் 2 தேர்வு எப்போது?- தமிழக அரசு முக்கிய தகவல்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தமிழகமே ஸ்தம்பித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தான் அதிக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் இன்று முதல் ஒரு வாரத்துக்கு தமிழக அரசு மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை அமல் செய்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசு, கொரோனா தொற்றுப் பரவலினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்தி வைத்து ஆணைப் பிறப்பித்தது. இந்நிலையில் எப்போது இந்த ஒத்தி வைத்தத் தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். எப்போது, எப்படி அதை நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுத்து முதல்வரிடம் நாங்கள் கோப்பை அனுப்பி வைப்போம். அதில் அவர் மாறுதல்கள் எதாவது தேவை என்று சொன்னால், அதைச் செய்து முடித்து நாளை சுற்றறிக்கை அனுப்பலாம் என்று திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com