செங்கல்பட்டில் ஆலையில் எப்போது தடுப்பூசி உற்பத்தி: அமைச்சர் முக்கிய தகவல்

செங்கல்பட்டில் ஆலையில் எப்போது தடுப்பூசி உற்பத்தி: அமைச்சர் முக்கிய தகவல்

செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழகத்திற்கு தந்தால் நாங்களே நடத்திக் கொள்வோம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் எழுதிய நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆலையில் எப்போது தடுப்பூசி உற்பத்தி செய்யப்படலாம் என்பது குறித்த தகவலைத் தந்துள்ளார்.

செங்கல்பட்டில் தடுப்பூசி ஆலையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இன்னும் அங்கு தடுப்பூசி தயாரிப்புகள் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை நேரில் சென்று பார்வையிட்டு தடுப்பூசி தயாரிக்கும் பணியினை தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

இதனை அடுத்து மத்திய அரசுக்கு சொந்தமான செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்திடம் அந்த ஆலையை ஒப்படைத்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று டெல்லி சென்றார். இதைத் தொடர்ந்து அவர், "செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர்" என்றுள்ளார். இதனால் செங்கல்பட்டு ஆலையில் கூடிய விரைவில் தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com