ஆசிரியர்களால் பாலியல் தொல்லையா? துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்ஆப் எண் வெளியீடு

ஆசிரியர்களால் பாலியல் தொல்லையா? துணை ஆணையர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்ஆப் எண் வெளியீடு

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் ஆகி தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பத்மா சேஷாத்ரி பள்ளி மட்டுமின்றி சென்னையில் உள்ள வேறு சில பள்ளிகளிலும் ஆசிரியர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளதாகவும் பிற மாவட்டங்களிலும் இதே போன்ற கொடுமை நடந்துள்ளதாகவும், தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருந்தால் தைரியமாக புகார் கொடுக்க முன்வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி துணை ஆணையர் ஜெயலட்சுமி அவர்களின் வாட்ஸ்அப் இன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

94447-72222 என்ற இந்த வாட்ஸ் அப் எண்ணில் மாணவிகள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்று அறிவித்ததை அடுத்து தற்போது புகார்கள் குவிந்து வருவதாக போலீசார் தகவல் வெளிவந்துள்ளது. சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் புகார் அளித்து வருவதாகவும் இதனை அடுத்து இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவிகளின் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com