சமூகப் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்!

சமூகப் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்!

பூ.கோ.சரவணன் மீதான பாலியல் புகார்கள் ஒருவாரத்திற்கு முன்பே என் தோழி மூலம் அறிந்தேன். அப்போது நாங்கள் பேசிக்கொண்டது.

“இவர்ட்ட இருந்து நமக்கு 2016-லேயே இப்படித் தொல்லை வந்திருக்கே தோழர்” என்றேன்.

“ஆமா தோழர், அப்போது எனக்கு மட்டும்தான் என்றிருந்தேன். ஆனால், இப்போதுதான் தெரிகிறது இவரைப் பற்றிச் சொல்லும் என்னுடைய தோழிகள் அனைவரும் ‘ஆமாங்க எனக்கும் அவனிடமிருந்து பாலியல் தொல்லை வந்திருக்கிறது’ என்கிறார்கள். அவனுக்கு இருக்கும் முற்போக்கு மற்றும் அதிகார முகத்தை வைத்துக்கொண்டு இதையெல்லாம் வெளியில் சொல்லத் தயங்கியிருக்கிறார்கள்”என்றார்.

இப்போதும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து எழுதுபவர்களும் கருத்திடுபவர்களும்

“முற்போக்காளர், நிறையப் படித்தவர் இவரா செய்தார்?

நல்ல பெண்ணியவாதியாச்சே இவர்?

என்னால் நம்பவே முடியவில்லை?

ஆச்சர்யமாக இருக்கிறது.

உன்பக்கம் இருக்கும் நியாயத்தை உறக்கப்பேசு.

நான் மதிக்கும் மிக முக்கியமான எழுத்தாளர், சிந்தனையாளரும் “பூ.கோ. உன்பக்கம் இருக்கும் நியாயத்தை உறக்கப் பேசு. தவறு என்றால் மான நஷ்ட வழக்குப் போடு” என்றும் பதிவிட்டுள்ளார்.

இவையெல்லாம் தான் அவருக்கான உந்துதல்கள். பலரும் இப்படியான முகத்தை வெளியே வைத்துக்கொண்டுதான் பல்வேறு குற்றச்செயல்களில் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இங்கு யாரும் யோக்கியன் கிடையாது. அவர்களுடன் பழகியவர்கள் பாவம் எதுக்கு அவனப் பத்திச் சொல்லிட்டு என்று நினைப்பதாலேயே யோக்கியனாக இருக்கிறார்கள். நான் உட்படத்தான். அதுதான், பலருக்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. தவறு என்று தெரிந்தால் உடனே சுட்டிக் காட்டுவோம். எந்த யோக்கிய முகத்திலிருந்தாலும் முதலில் மணியை நாமே கட்டுவோம்.

நமக்குத் தேவை வஞ்சினம் அல்ல. நியாயம். பாலியல் வன்கொடுமை செய்பவர் ஓரளவேனும் சமூகப் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com