'எப்படிப்பட்ட ஊரடங்கு போடணும்?'- அரசுக்கு விஜயபாஸ்கர் ஆலோசனை

'எப்படிப்பட்ட ஊரடங்கு போடணும்?'- அரசுக்கு விஜயபாஸ்கர் ஆலோசனை

தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதிக்குப் பிறகு முழு ஊரடங்கு அமல் செய்யப்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எப்படிப்பட்ட விதிமுறைகள் கொண்ட ஊரடங்கு அமல் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'முழு ஊரடங்கின் பொது மக்களின் நன்மைக்காக சில தளர்வுகளை அறிவித்தோம். ஆனால், இந்த தளர்வுகளை மக்கள் சிலர் வெளியே சுற்ற பயன்படுத்தி வருகிறார்கள். மக்களில் சிலர் தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறி வருகிறார்கள். முழு ஊரடங்கை சிலர் விடுமுறைக் காலம் என்று சுற்றி வருகிறார்கள். மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு கொடுக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

இன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையில் அவர்கள், தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழுமையான ஊரடங்கை அமல் செய்தால் மட்டுமே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறி இருக்கிறார்கள். எனவே தளர்வுகளற்ற முழு ஊரடங்கை எடுக்க அரசு நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறது' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசியுள்ள விஜயபாஸ்கர், 'பால், காய்கறி, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்து முழுமையான ஊரடங்கு அவசியம்' எனக் கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com