அரபிக்கடலில் புயல்: தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலில் புயல்: தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கன முதல் மிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இது குறித்து வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது:-

நேற்று லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இன்று அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று,

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதிகன மழையும், தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றறும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை யெப்ப வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com