அதி தீவிர புயலாக மாறிய தவ்-தே: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

அதி தீவிர புயலாக மாறிய தவ்-தே: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

அரபிக்கடலில் தவ்-தே புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-

நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த தவ்-தே புயல் மேலும் வலுப்பெற்று நேற்று மாலை தீவிர புயலாகவும், அதனைத் தொடர்ந்து இன்று காலை அதி தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரப்பிகடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com