சென்னையில் 7 மணிக்கே தொடங்கிய நடமாடும் காய்கறி விற்பனை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் 7 மணிக்கே தொடங்கிய நடமாடும் காய்கறி விற்பனை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு என்றும் இந்த ஊரடங்கில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்பட எந்த கடைகளும் திறக்க அனுமதி கிடையாது என்றும் பால் மருந்தகம் குறிப்பிட்ட நேரங்களில் ஹோட்டல்கள் தவிர எந்த கடைகளும் திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி, மதுரை, கோவை உள்பட பல பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கோவையில் அனைத்து வார்டுகளிலும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் ஐந்து மண்டலங்களில் பொருள்கள் விற்பனை செய்ய 50 வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலைத்துறை மூலம் வாகனங்களில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று சென்னையில் காலை 7 மணிக்கே முக்கிய பகுதிகளில் காய்கறி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் காய்கறி விலை மிகவும் குறைவாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தோட்டக்கலைத்துறை மூலம் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com