ஒரு வார ஊரடங்கில் காய்கறி விற்பனை எப்படி?- உதவி எண் அறிவிப்பு

ஒரு வார ஊரடங்கில் காய்கறி விற்பனை எப்படி?- உதவி எண் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. நாளை அமலாகும் ஊரடங்கு உத்தரவு, இம்மாதம் 31 ஆம் தேதி வரை தொடரும்.

இந்தக் காலக்கட்டத்தில், மளிகை கடைகள், காய்கறி மற்றும் பழக் கடைகள் இயங்குவதற்குக் கூட அனுமதி கிடையாது. அத்தியாவசியப் பொருட்களைப் பொறுத்தளவில் பால் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே இயங்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று, கருப்புப் பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல் செய்து தொற்றுப் பரவலைக் குறைக்கும் முயற்சியில் அரசுத் தரப்பு இறங்கியுள்ளது.

இந்நிலையில் உள்ளூர் அரசு நிர்வாகங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தினமும் காலை 7 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படும். சென்னையில் 1,610 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதர மாவட்டங்களில் 2,770 வாகனங்களில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது மக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், '044-22253884' என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com