இருமடங்காக உயர்ந்த காய்கறி விலை: அநியாய கொள்ளை என பொதுமக்கள் புலம்பல்!

இருமடங்காக உயர்ந்த காய்கறி விலை: அநியாய கொள்ளை என பொதுமக்கள் புலம்பல்!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில் நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்றும் நாளை முதல் காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்பட எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்க காய்கறி கடைகளில் பொது மக்கள் குவிந்துள்ளனர். இன்று காலை முதலே கோயம்பேடு மார்க்கெட்டிலும், சென்னையில் உள்ள அனைத்து மார்க்கெட்டிலும் காய்கறி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. ஆனால் காய்கறி விலையைக் கேட்டதும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த வாரம் விற்பனையான காய்கறி விலையில் இருந்து இருமடங்கு விலை உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து கொள்கின்றனர். வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிப்பதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதாகவும் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலைகள் அதிகரித்து இருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் இருந்து கூறுகின்றனர். மேலும் தேவை அதிகமிருப்பதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏழு நாட்களுக்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்வதால் கோயம்பேடு காய்கறி கடைகளில் காய்கறிகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com