கோவையில் இன்று 88 இடங்களில் தடுப்பூசி முகாம்: 18 வயதினர்களும் போட்டு கொள்ளலாம் என அறிவிப்பு!

கோவையில் இன்று 88 இடங்களில் தடுப்பூசி முகாம்: 18 வயதினர்களும் போட்டு கொள்ளலாம் என அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக சென்னையில்தான் அதிக கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் நேற்று சென்னையை விட கோவையில் மிக அதிகமான பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கோவையில் தடுப்பூசி போடுவது குறைக்கபட்டுள்ளதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் தற்போது 88 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 88 இடங்களில் முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்து இருப்பதாகவும் இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே முதல் டோஸ் போட்டு 84 நாட்கள் ஆனவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படும் என்றும் எனவே கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டவர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றும் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேலானவர்கள் யார் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

மேலும் தடுப்பூசி போட வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை எடுத்து கொண்டு வர வேண்டும் என்றும் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கோவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com