48 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்: சொந்த ஊருக்காக நிதி திரட்டிய அமெரிக்க தமிழர்

48 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்: சொந்த ஊருக்காக நிதி திரட்டிய அமெரிக்க தமிழர்

அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் தமிழர் ஒருவர் தனது சொந்த ஊருக்காக 48 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையிலுள்ள மருத்துவ கல்லூரியில் படித்தவர் ராஜேஷ். இவர் தற்போது அமெரிக்காவில் நரம்பியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் பரவி வருவதாகவும் பொதுமக்கள் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனது உறவினர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டார். இதனை அடுத்து அவர் தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் தகவல் தெரிவித்து தனது சொந்த ஊருக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் ஒரு சில அமெரிக்க நண்பர்கள் தாராளமாக நிதி அளித்தனர். அவ்வாறு திரட்டப்பட்ட நிதி 48 மணி நேரத்தில் ஒரு கோடி கிடைத்தது. இந்த நிதியை தனது மனைவியின் அறக்கட்டளை மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உள்பட மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தும்படி அனுப்பியுள்ளார். இதனை அடுத்து கோவை மக்கள் அமெரிக்க தமிழரான ராஜேஷ் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com