நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பு: அமெரிக்காவில் இருந்து டுவிட் செய்த மர்ம நபர்!

நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பு: அமெரிக்காவில் இருந்து டுவிட் செய்த மர்ம நபர்!

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்றும் அதனால் அவர் எனக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் டுவிட்டரில் ஒருவர் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள இந்த நேரத்தில் திடீரென ரேஷன் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர் முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். ‘நீங்கள் ரேஷன் கடைகளை திறக்க அனுமதித்தால் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு நீங்கள்தான் பொறுப்பு, நீங்கள் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த பலர் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் இவர் அமெரிக்காவில் இருந்து இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறப்பதற்கும் அமெரிக்காவில் உள்ள உங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கும் என்ன சம்பந்தம் என்று கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். மேலும் நஷ்ட ஈடு வேண்டுமென்றால் அமெரிக்க அதிபரிடம் கேளுங்கள் என்றும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com