கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டெழும் தமிழகம்: உதயநிதி நம்பிக்கை

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டெழும் தமிழகம்: உதயநிதி நம்பிக்கை

கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்து வரும் தமிழகம், விரைவில் அதிலிருந்து மீண்டு வரும் என்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி கூறியதாவது:-

திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் தமிழகம் விரைவில் இந்த தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வரும்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தான் தற்போது மாநிலம் தழுவிய அளவில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் வந்தாலும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, மற்ற கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

கொரோனா ஊரடங்கு உத்தரவின் பலனை நாம் அனைவரும் ஒழுங்காக பின்பற்றினால் ஒரு வாரத்தில் பெற முடியும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் இந்த பேரிடரிலிருந்து நாம் மீண்டு வர முடியும்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com