நாளை அனைத்து கடைகளும் திறக்க அனுமதியா? நாளை மறுநாள் முதல்?

நாளை அனைத்து கடைகளும் திறக்க அனுமதியா? நாளை மறுநாள் முதல்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் தளர்வுகள் அதிகமாக விதிக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என இன்று கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து நாளை மறுநாள் முதல் தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு உத்தரவு இரண்டு வாரங்களுக்கு பிறப்பிக்கப்படும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனை அடுத்து நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் நாளை மறுநாள் முதல் பால், காய்கறி மற்றும் மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்கக் கூடாது என்ற கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்துக்கு இந்த கடுமையான ஊரடங்கு இருக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் நாளை திறந்து இருக்கும் அனைத்து கடைகளிலும் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com