சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு: இன்றைய விலை என்ன?

சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு: இன்றைய விலை என்ன?

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பதும் கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று சென்னையில் மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

சென்னை ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.33 உயர்ந்துள்ளது என்பதும் ஒரு சவரனுக்கு ரூபாய் 264 உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ.4640 எனவும், ஒரு சவரன் விலை ரூ.37,120 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.4999 எனவும், 8 கிராம் விலை ரூ.39,992 எனவும் விற்பனையாகி வருகிறது. நேற்று 22 காரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.4966 எனவும், சவரன் ஒன்றின் விலை ரூ.36,856 எனவும் விற்பனையானது.

அதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றின் விலை ரூ.77,100 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெள்ளியின் விலை கிராம் ரூ.76.10 எனவும் கிலோ விலை ரூ.76,100 எனவும் விற்பனையானது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com