இன்றும் நாளையும் பேருந்துகள் இயக்குவது, கடைகள் திறப்பது சரியா? சமூக ஆர்வலர்கள் அதிருப்தி!

இன்றும் நாளையும் பேருந்துகள் இயக்குவது, கடைகள் திறப்பது சரியா? சமூக ஆர்வலர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே இரண்டு வாரங்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை மறுநாள் உடன் முடிவடைகிறது. ஆனால் நாளை மறுநாள் முதல் மீண்டும் ஒரு வாரம் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதே நேரத்தில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்றும் அது மட்டுமின்றி அனைத்து பேருந்துகளும் இன்றும் நாளையும் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்து போக்குவரத்தில் சார்பாக இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மிகவும் ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் திறப்பதற்கு அனுமதி அளித்தது தவறான முடிவு என்றும் அதேபோல் ஏற்கனவே பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டதால் இன்றும் நாளையும் பேருந்துகள் இயக்குவதும் அவசியமற்றது என்று கருத்து கூறி வருகின்றனர்.

இன்றும் நாளையும் தேவையில்லாத பயணம் தான் அதிகம் இருக்கும் என்றும் அதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தான் வாய்ப்பு உள்ளது என்றும் அரசின் இந்த அறிவிப்பு தேவையற்றது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். அதேபோல் ஒரு வாரம் முழுவதும் காய்கறி கடை மளிகை கடைகள் மூடச்சொல்வது தவறு என்றும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு இதுகுறித்து பரிசுகளை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com