95 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை: ரூ.100ஐ நெருங்கும் அபாயம்!

95 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை: ரூ.100ஐ நெருங்கும் அபாயம்!

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே நிலையில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியான தகவல் ஆகும்.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டர் விலை ரூ.95.06 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து ரூ.89.11 என விற்பனையாகி வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ரூபய் 95க்கும் மேல் ஆகி விட்ட நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் 100ஐ தொட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அரசு பொறுப்பேற்ற உடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோன்ற அறிவிப்பு இன்னும் வெளிவராதது மக்களுக்கு அதிருப்தியாக உள்ளது. இருப்பினும் விரைவில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்வதுதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டாலும் மத்திய மாநில அரசுகள் வரிகளை குறைத்தாலே பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com