தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு எனத் தகவல்!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு எனத் தகவல்!

தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கொரோனா தொற்றைப் பரவலைக் குறைக்கும் நோக்கில் இந்த ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அளவில் கொரோனா தொற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னும் தொற்றுப் பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் ஒரு வாரத்துக்கு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளோடு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், 'கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை. அடுத்த ஓரிரு வாரங்களுக்கு இந்த மாவட்ட ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்' என்று அறிவுறுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com