தமிழக-புதுவை எல்லையில் ஒரு விநோதம்: ஒருபக்கம் பிஸி, இன்னொரு பக்கம் கடையடைப்பு!

தமிழக-புதுவை எல்லையில் ஒரு விநோதம்: ஒருபக்கம் பிஸி, இன்னொரு பக்கம் கடையடைப்பு!

தமிழக புதுவை எல்லையில் உள்ள சாலை ஒன்றில் ஒரு பக்கம் கடைகள் திறந்து பிஸியாக உள்ள நிலையில் இன்னொரு பக்கம் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுவது வினோதமாக உள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக எந்த கடைகளும் திறக்காமல் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் பகல் 12 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக புதுவை எல்லையான திருக்கனூர் என்ற பகுதியில் ஒரே கடைவீதியில் உள்ள ஒரு பக்கம் தமிழக பகுதியாகவும், இன்னொரு பக்கம் புதுச்சேரி பகுதியாகவும் உள்ளன. எனவே இந்த கடைவீதியில் புதுச்சேரி பகுதியில் உள்ள கடை முழுவதும் திறக்கப்பட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்கி கொண்டு பிசியாக உள்ளனர். ஆனால் தமிழக பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு வாகனங்கள் எதுவும் இல்லாமல் வெறிச்சோடி இருக்கின்றன. இது குறித்த புகைப்படம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறும்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 12 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி பகுதியில் கடைகள் மட்டும் திறந்து இருக்கிறது. எங்களுக்கு ஏதும் தேவை என்றால் அந்த பகுதிக்கு சென்று நாங்கள் வாங்கி கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com