கருப்பு பூஞ்சை நோய்ப் பரவல்: தமிழக அரசு எடுத்த நடவடிக்கை

கருப்பு பூஞ்சை நோய்ப் பரவல்: தமிழக அரசு எடுத்த நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்றைப் போலவே கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் சில இடங்களில் பரவி வருகிறது. இதற்கு எதிராகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கிப் பேசினார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்:-

'நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்து செலுத்தப்படுவதால் கருப்பு பூஞ்சை நோய் வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்த காரணத்தினால் அது வருவதில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல மருத்துவ ஆக்சிஜன் செலுத்தப்படுவதால் கூட கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது. மேலும், தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஆக்சிஜன் மூலமாகக் கூட இப்படியான பாதிப்புகள் ஏற்படலாம் எனப்படுகிறது.

இதுவெல்லாம் சொல்லப்படும் கருத்துகள் தான். விஞ்ஞானப் பூர்வமாக எதையும் உறுதி செய்யாமல் நிலைப்பாடு எடுக்க முடியாது. ஆயினும், இந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்ய உள்ளோம்' என்று கூறியுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com