12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய தமிழக அரசு!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மட்டும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கல்லூரி படிப்பிற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்கள் அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யாமல் தற்போதைய நடைமுறையில் நடத்த வேண்டும் என்றும் ஒரு சில முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மட்டுமாவது நடத்த வேண்டும் என்றும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தங்களுடைய கருத்துக்களை அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக அரசு தனது கருத்துக்களை அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா தொற்று குறைந்த பிறகு பொது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்று கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com