புதிய தேசிய கல்விக் கொள்கை: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் தமிழக அரசு

புதிய தேசிய கல்விக் கொள்கை: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் தமிழக அரசு

புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல் செய்ய முடியாது என்று தமிழக அரசு முன்னரே திட்ட வட்டமாக தெரிவித்திருந்த நிலையில், மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசுக்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்வது குறித்து மத்திய கல்வி அமைச்சர், மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் நாளை கலந்துரையாட இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், 'மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் கலந்துரையாடுவதை விட, மாநில கல்வித் துறை அமைச்சர்களுடன், மத்திய அரசு கலந்துரையாட வேண்டும்' என்று கடிதம் அனுப்பி உள்ளார்.

திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே புதிய தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, 'தமிழகத்தில் என்னவானாலும் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம்' என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com