ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு நிர்ணயம்

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு நிர்ணயம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருள்கள், தடுப்பூசிகள், ரெம்டெவிசிர் மருந்து, ஆக்ஸிஜன் ஆகியவை பற்றாக்குறை இருந்து வருகிறது.

மேலும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணம் கேட்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தமிழக அரசு இது குறித்து ஆய்வு செய்து ஆம்புலன்ஸ்க்கு கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் ஆம்புலன்சில் உள்ள வசதிகளின் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்க படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கி.மீ வரை ரூ.2000 கட்டணமும் 10கிமீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.50 கட்டணம் என்றும், ஆம்புலன்ஸில் உள்ள வசதிகளை பொறுத்து ரூ.1000-ல் இருந்து ரூ.4000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com