கொரோனா நிதிச்சுமை: அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசின் முடிவு!

கொரோனா நிதிச்சுமை: அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசின் முடிவு!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு நிதிச் சுமை ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த விடுப்பு ஊதிய நிறுத்தி வைப்பு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்தான அரசாணையை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார்.

இந்த முடிவு தமிழக அரசு ஊழியர்களை வெகுவாக பாதிக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் கொரோனா காலக்கட்டத்தில் தமிழக அரசுக்குப் பல்வேறு அவசர நிதி தேவைப்படும் என்பதால், அரசு ஊழியர்கள் தரப்பில் இதற்கு பெரிய எதிர்ப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com