எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு வழங்கிய சிறப்ப்பு சலுகை!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு வழங்கிய சிறப்ப்பு சலுகை!

முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தோல்வி அடைந்து தற்போது எதிர்கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் தாங்கள் குடியிருந்து வரும் அரசு இல்லங்களை காலி செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து அமைச்சர்களும் காலி செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் இருந்து வரும் நிலையில் அவர் தொடர்ந்து அதே பங்களாவில் தங்குவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. எனவே அவர் தொடர்ந்து க்ரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அரசின் இந்த பெருந்தன்மையான நடவடிக்கைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com