ஐடி புதிய விதிகளை எதிர்த்து இசைக்கலைஞர் வழக்கு! மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

ஐடி புதிய விதிகளை எதிர்த்து இசைக்கலைஞர் வழக்கு! மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்த புதிய ஐடி விதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஐடி விதிகளை எதிர்ப்பு இசை கலைஞர் டிஎம் கிருஷ்ணா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை எதிர்த்து இசை கலைஞர் டிவி கிருஷ்ணா வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் ’மத்திய அரசு செய்துள்ள ஐடி விதிகளில் புதிய திருத்தங்கள் தன்னிச்சையானது என்றும் அந்த விதிகள் குழப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்தி ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற சேவை நிறுவனங்கள் மீது பொருத்தமற்ற வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டுப்பாடுகள் செய்தி ஊடகங்களை நசுக்கும் செயல் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு கலைஞர், கலாச்சார விமர்சகர் என்ற அடிப்படையில் தனது உரிமைகளை புதிய விதியை பாதிப்பதாகவும் டி எம் கிருஷ்ணா தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் புதிய விதிப்படி வாட்ஸ்அப். ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்தை முதலில் பதிவு செய்தவர், பதிவிட்டவர் பெயரை தெரிவிப்பது கட்டாயம் என்பது அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை புதிய ஐடி விதி மீறுவதாக மனுவில் டிஎம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும் தனிமனித அந்தரங்க உரிமையை தகவல் தொழில் தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய விதி மீறுவதாகும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎம் கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது என்பதும், டிஎம் கிருஷ்ணாவின் இந்த மனுவுக்கு மத்திய அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய ஐடி விதிகள் எதிர்த்து ஏற்கனவே டெல்லி, கேரளா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் டிஎம் கிருஷ்ணா மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com