மின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம் நீடிப்பு: மின்வாரியம் தகவல்!

மின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம் நீடிப்பு: மின்வாரியம் தகவல்!

மின் கட்டணம் செலுத்துவதற்கு மே 14-ஆம் தேதி கடைசி தினமாக இருந்த நிலையில் சமீபத்தில் மே 30-ஆம் தேதி வரை மின் கட்டணம் கட்டலாம் என தமிழக அரசின் மின் வாரியம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக பொது மக்கள் வெளியே வர வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை நீடித்து மின் வாரியம் அறிவித்துள்ளது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் 15 ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏப்ரல் மாதம் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ள உயர் மின் அழுத்த மின் இணைப்பு உள்ளவர்கள் தாமத கட்டணத்துடன் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்பு தொகை செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com