தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் அருகில் உள்ள மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்பட்டு வந்தது. இந்த ஆலையை எதிர்த்து 100 நாட்கள் அமைதியான போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம்!

2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இன்று இந்த போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் அருகில் உள்ள மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்பட்டு வந்தது. இந்த ஆலையை எதிர்த்து 100 நாட்கள் அமைதியான போராட்டம் நடைபெற்றது.

100வது நாளின் போராட்டத்தின் முன்னெடுப்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க செல்லப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அதில் 13 பேர் கொடூரமாகப் பலியாகினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பொதையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது, இந்த சம்பவத்தை நானும் உங்களைப் போன்று தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று கூறினார். ஆனால் தமிழக காவல் துறை அவரது கட்டுப்பாட்டிலிருந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று இன்று வரை தெரியவில்லை.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தப் பலரும் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவியை அளித்து, விசாரணை கமிஷன் அமைப்பதாகச் சமாளித்தது தமிழக அரசு. அந்த கமிஷனின் விசாரணை அறிக்கை அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

நேற்று மதுரைக்கு கொரோனா ஆய்வுப் பணி மேற்கொள்ள சென்ற மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு பணிக்கான நகல்களை வழங்கினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது தொடக்கப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு வாப்பஸ் பெற்றுள்ளது.

3-வது ஆண்டு நினைவு தினம் என்பதால் உயிரிழந்தோர் புகைப்படங்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com