யாஸ் புயல்: தமிழகத்தின் இந்த மாவட்டத்திற் மழை கொட்டித் தீர்க்குமாம்

யாஸ் புயல்: தமிழகத்தின் இந்த மாவட்டத்திற் மழை கொட்டித் தீர்க்குமாம்

வங்கக் கடலில் 'யாஸ்' புயல் உருவாகியுள்ள நிலையில், அது அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. யாஸ் புயல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாக மாறும் யாஸ், நாளை மதியத்துகுக மேல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

யாஸ் புயல் குறித்து பிரபல வானிலை வல்லுநரான 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளதாவது:-

யாஸ் புயல் மூலம் தமிழகத்தில் நேரடி பாதிப்பு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. கன்னியாகுமரியில் ஆங்காங்கே மழை பெய்யலாம். 25 ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் மழையை எதிர்பார்க்கலாம்.

அதேபோல தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யலாம். அதேபோல கேரளாவில் நாளை முதல் அடுத்த 5 அல்லது 6 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

யாஸ் புயல் மூலம் வட தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும். திருவள்ளூர் முதல் தஞ்சாவூர் வரை இதை எதிர்பார்க்கலாம். அதேபோல சென்னை, கடலூர், புதுச்சேரி போன்ற பகுதிகளில் வெப்பநிலையானது 39 முதல் 41 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், 'எப்போதெல்லாம் ஒரு புயல் உருவாகி அது மேற்கு வங்கம், ஒடிசா அல்லது வங்க தேசத்துக்குச் செல்கிறதோ அப்போதெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும். இந்த முறை அது அதி கனமழையாகக் கூட இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com