கமல் மீதான அவதூறு வழக்கில் மதுரை நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கமல் மீதான அவதூறு வழக்கில் மதுரை நீதிமன்றம் முக்கிய உத்தரவு

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மீதான அவதூறு வழக்கு ஒன்றில் மதுரை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து கமல்ஹாசன் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் வள்ளியூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அந்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கமல்ஹாசன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும் அதனால் கமல்ஹாசன் மீதான வழக்கை ரத்து செய்வதாகவும் உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com