2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்ஸ்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் மா சுப்பிரமணியம் தகவல்!

2 ஆயிரம் டாக்டர்கள், 6 ஆயிரம் நர்ஸ்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் மா சுப்பிரமணியம் தகவல்!

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த போதிலும் தமிழகத்தில் மட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் 4 லட்சம் என கடந்த சில நாட்களுக்கு முன் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சுமார் 3 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 33 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு தற்போது கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் நியமனம் செய்ய இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் 2000 மருத்துவர்கள் 6 ஆயிரம் செவிலியர்கள் மற்றும் 2000 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சேலம் இரும்பு ஆலையில் 25ஆம் தேதிக்குள் 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 10,000 மருத்துவ ஊழியர்கள் பணி நியமனம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com