புதிய ஊரடங்கு தளர்வுகள்.. ‘டாஸ்மாக்’ திறப்பது எப்போது? நேரம் என்ன?

புதிய ஊரடங்கு தளர்வுகள்.. ‘டாஸ்மாக்’ திறப்பது எப்போது? நேரம் என்ன?

புதிய ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் திறக்கும் நேரம் குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் மே 10-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 14-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது புதிய ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 14-ம் தேதி 21-ம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் திறக்கப்படும்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தால், வெளிமாநிலங்களிலிருந்து மதுபானங்கள் கடத்துவது, சாராயம் காய்ச்சி விற்பது போன்றவை அதிகரித்து வந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த புதிய அறிவிப்பால் இனி சாராயம் உற்பத்தி இருக்காது. மது பிரியர்கள் பாதுகாப்பான மதுக்களை வாங்கி குடிக்கலாம் என்று வரவேற்றுள்ளனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com